இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு


(லியோன்)

 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக தொழில் பயிற்சி நெறியினை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு   மட்டக்களப்பில்  நடைபெற்றது .


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடளாவிய ரீதியில்  தேசிய இளைஞர் சேவைகள் தொழில் பயிற்சி நிலையத்தின் ஊடாக  படித்துவிட்டு வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு ஆறுமாத தொழில் பயிற்சிகளை  வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது . 

அந்த வகையில் மட்டக்களப்பு ,சாய்ந்தமருது தேசிய   இளைஞர் சேவைகள் தொழில் பயிற்சி நிலையத்தில் 2017ஆம் ஆண்டு தொழில் பயிற்சி நெறிகளை  நிறைவு செய்து வெளியேறும் இளைஞர் யுவதிகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட  என் வி கியூ  தர சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு  குடியிருப்பு தனியார்  விடுதியில் நடைபெற்றது  

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தொழில் பயிற்சி நிலைய போதனாசிரியர்களின்  ஒழுங்கமைப்பில் தேசிய இளைஞர் சேவைகள் தொழில் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி என் .குகதாஸ்  தலைமையில்  இந்நிகழ்வு நடைபெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .யோகேஸ்வரன் , முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கருணாகரன் , தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கிழக்கு மாகான பணிப்பாளர் சிசிர குமார  தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஹாலிதின் ஹமீன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற  உத்தியோகத்தர்களான   திருமதி .கலாராணி யேசுதாசன் ,  திருமதி . நிஷாந்தி அருள்மொழி , தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர் .  .