மண்டூர்ப் பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்.



(மண்டூர் நிருபர்)  மண்டூர் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் புதல்வர்   பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன இன்று(16) பிற்பகல் மண்டூர் பிரதேசத்திற்கு வருகை தந்தார்.

இதன் போது முதலில் மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.பின்பு வன்ட் வாத்திய இசையுடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டு மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து வறிய மாணவர்கள் பலருக்கு பரிசுப் பொருட்கள் வழங்க
ப்பட்டன.

இங்கே பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன உரையா 
றுகையில்

2015ம் ஆண்டு ஜனவரி
08தேர்தலின் பின்னர் நாடு பூராகவும் நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.அதன் பின்னர் நாங்கள் வரும் பிரதேசம் மண்டூர் பிரதேசமாகும்.இந்த பூமியில் காலடி எடுத்து வைத்ததும் எனது உள்ளம் பரவச நிலையை அடைந்தது.இந்த முருகன் ஆலயத்தின் தொன்மை அதன் பெருமை இங்கு கூறப்பட்டது.இவ்வாறான ஒரு பிரதே
த்திற்கு வரும் பொழுதுதான் இந்த மக்களின் தேவைப்பாடுகள் இந்த பிரதேசத்தின் அபிவிருத்தி குன்றிய நிலமையினை காணும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

எனது இந்த அரசியல் வரலாற்றில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் பாகுபாடு பார்க்காது அனைவரையும் ஒன்றாய் மதித்து இந்த நாட்டின் பிரஜை
ளாக கருதுகின்றேன்.மண்டூர்ப் பிரதே
த்தின் முக்கியமான அபிவிருத்தி வேலைகளை முடிந்தளவில் செய்வேன்.

சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் இந்த மண்டூர் முருகனின் அருளும் ஆசியும்தான் என்னை இந்த இடத்தில் அழைத்திருக்கின்றது.இந்த முருகன் ஆலயத்தை எங்கள் சிங்கள மக்கள் அதிகம் வணங்குகின்றார்கள்.

ஆகவே இந்த பிரதே
த்தில் விவசாயத்தின் தேவைகள் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமாக நாம் இங்குள்ள பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்
ரும் காலங்களில் இன்னும் எவ்வாறு வளப்படுத்தலாம் என்பது பற்றி விவசாய அமைச்சின் ஊடாக கலந்துரையாடி மேலதிகமாக என்னென்ன வேலைத்திட்டம் எவ்வாறான வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும்  என்பது பற்றி எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் என கூறிக்கொள்கின்றேன்.

இறுதியாக மண்டூர் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலையை பார்வையிட்டதுடன் அதன் குறைபாடுகளை அங்குள்ள வைத்தியர் பணியாளர்களிடம்  கேட்டறிந்தார்


 இந் நிகழ்வில் பிரதேச இளைஞர்கள்,பொது அமைப்புக்கள்,   பிரதேச சபை உறுப்பினர்கள்,புத்திஜீவிகள் மற்றும்     பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Add caption


Add caption