பெரியகல்லாறில் “கல்வியூராம் கல்லாற்றுப்பதி கடல்நாச்சியே போற்றி”இறுவெட்டு வெளியீடு

மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீகடல்நாச்சியம்மன் மற்றும் ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயம் ஆகியவை தொடர்பில் பாடப்பட்ட கல்வியூராம் கல்லாற்றுப்பதி கடல்நாச்சியே போற்றி என்னும் இறுவெட்டு வெளியீடு இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தினால் தென்னிந்திய பாடகர்களைக்கொண்டு இலங்கையின் இசையமைப்பாளர் சுஜிதனின் கைவண்ணத்தில் இந்த இறுவெட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்வெளியீட்டு நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை 06.00மணியளவில் பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீகடல்நாச்சியம்மன் ஆலய முன்றிலில் பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஆ.அகிலன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ மேகானந்த குருக்கள்,மட்டக்களப்பு,கல்லடி காயத்திரிபீட சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார்,கடல்hநச்சியம்மன் ஆலய பிரதமகுரு ச.அரசன் பூசகர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மீள்குடியேற்ற, இந்துக்கலாசார,புனர்வாழ்வு,மீள்கட்டுமான,வடமாகாண அபிவிருத்தி,இந்துசமய விவகார அமைச்சின் செயலாளர் பொன்.சுரேஸ் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வில் ஆலயங்களின் தலைவாகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.