(படுவான் எஸ்.நவா)
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுவாரத்தின் முதலாவது நாளான இன்று (22) விளையாட்டு உத்தியோகத்தர் அவர்களின் நெறிப்படுத்தலினுடாக பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து பிரதேச செயலகத்தில் ஆரம்ப நிகழ்வை முடித்துவிட்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
பிரதான வீதியினுடாக பிரதேச சபை வரை சென்று சுமார் இரண்டு கிலோமீற்றர் துரம் நடந்து பயிற்சியில் ஈடுபட்டடனர்.தொடர்ந்து பிற்பகல் 4.00 மணியளவில் வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தில் உத்தியோகத்தர்களுக்கான கயிறுளுத்தல் போட்டி இடம்பெற்றது. வெற்றி பெற்ற குமுக்களுக்கான வெற்றி பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.













