கருவப்பன்கேணி விபுலானந்தா கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விஞ்ஞான ஆய்வுக்கூட திறப்பு விழா


(லியோன்)

மட்டக்களப்பு கருவப்பன்கேணி 
விபுலானந்தா 
கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கனிஷ்ட விஞ்ஞான ஆய்வுக்கூட கட்டிட திறப்பு விழா இன்று பிற்பகல் நடைபெற்றது .


பண்பு ,அறிவு மற்றும் வலுமிக்க மனித நேய மாணவர் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை “ தேசிய வேலைத்திட்டம் 2016 – 2020  இன் கீழ் கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கான பாடசாலை கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு கருவப்பன்கேணி  விபுலானந்தா 
 கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கனிஷ்ட விஞ்ஞான ஆய்வுக்கூட கட்டிடத்தை  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு  திறந்து வைத்தார்

இதனை தொடர்ந்து  கல்லூரி வளாகத்தில் கல்வி அமைச்சின்   PSDG வேலைத்திட்டத்தின் நிதி   ஒதுக்கீட்டின் கீழ்; நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்திற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வும்   நடைபெற்றது .

கல்லூரி அதிபர் எஸ்  .சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இனைப்பாளர் வி . மகேஸ்வரன் , கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர்  நிஷாம் ,மட்டக்களப்பு வலயக்  கல்விப்பணிப்பாளர்  கே .பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி  கே .அருள்பிரகாசம் , மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  ஞா ,சிரிநேசன்  எஸ் .யோகேஸ்வரன் ,  பாடசாலை பிரதி அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் , கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலர் , கலந்துகொண்டனர்