சிவானந்தா தேசிய பாசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


  (லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாசாலையில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள மூன்று  மாடி நிர்வாக  மற்றும் வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர்  கே .ஜசோதரன் தலைமையில் நடைபெற்றது .


PSDG வேலைத்திட்டத்தின் கீழ் 4௦ மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த மூன்று  மாடி கட்டிடம்  நிர்மாணிக்கப்படவுள்ளது .

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில்  பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ,கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் .

இதனை தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளிலும்  கலந்துகொண்டு சிறப்பித்தார்

இந்நிகழ்வில் ராமகிருஷ்ணன் மிஷன் தலைவர்  சுவாமி வணக்கத்துக்குரிய  ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் ,அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர முதல்வர் , தியாகராஜா சரவணபவன் , , மட்டக்களப்பு வலயக்  கல்விப்பணிப்பாளர்  கே .பாஸ்கரன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி  கே .அருள்பிரகாசம் , மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  எஸ் .வியாலேந்திரன் . எஸ் .யோகேஸ்வரன் , ஞா .ஸ்ரீநேசன் ,அலிசாகிர் மௌலானா  , பாடசாலை பிரதி அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்