(லியோன்)
மட்டக்களப்பு லியோ கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு
மாவட்ட நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின்
அனுசரணையில் “ உன்னை நீ அறி “ எனும் தலைப்பின் கீழ் சிறுவர் துஸ்பிரயோக
விழிப்புணர்வு வீதிநாடகம் மட்டக்களப்பில் நடைபெற்றது
மட்டக்களப்பு லியோ கழகம் மற்றும்
நம்பிக்கையின் ஏணி நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு
, சமூக அபிவிருத்தி , மாணவர்களுக்கான கல்வி அபிவிருத்தி போன்ற பல சமூக பணிகளையும் ,சமூகங்களுக்கிடையில்
விழிப்புணர்வு நிகழ்வுகளை, முன்னெடுத்து வருகின்றன .
இதன் கீழ் சிறுவர்களுக்கு எதிரானா பாலியல்
துஸ்பிரயோகங்கள் , பாலியல் வன்முறைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதிநாடகம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது
.
நடைபெற்ற விழிப்புணர்வு வீதி நாடக நிகழ்வில் லியோ கழக உறுப்பினர்கள் , நம்பிக்கையின் ஏணி நிறுவன உத்தியோகத்தர்கள் ,பாடசாலை
மாணவர்கள் ,இளைஞர் ,யுவதிகள்
கலந்துகொண்டனர்