துவிச்சக்கர வண்டி விபத்துக்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஸ்டிகர்


(லியோன்)

துவிச்சக்கர வண்டி பயணிகளின்  விபத்துக்களை தடுப்பதற்கான  விழிப்புணர்வு ஸ்டிகர் ஒட்டு நடவடிக்கைகள் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டன 
 .

இலங்கையில்  இடம்பெறுகின்ற துவிச்சக்கர வண்டி பயணிகளின்  விபத்துக்களை  தடுப்பதற்கான நடவடிக்கையினை இலங்கை போக்குவரத்து பொலிஸ் திணைக்களத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

மட்டக்களப்பு மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டி விபத்துக்கள் தற்போது   அதிகரித்துள்ள நிலையில்  கடந்த 2017  ஆம் ஆண்டு காலப்பகுதியில் துவிச்சக்கர வண்டியில் விபத்துக்கு உள்ளானோர்  11 பேர்  , பலத்த காயங்கள் உள்ளானோர் 41 பேர்   சிறு காயங்களுக்கு உள்ளானோர் 76 பேருமாக பதிவாகியுள்ளதாகவும்

2018ஆம் ஆண்டு இது வரையிலான காலப்பகுதியில் துவிச்சக்கர வண்டியில்   விபத்துக்கு உள்ளானோர்  09 பேர்   பலத்த காயங்கள் உள்ளானோர் 13 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானோர் 20   பேருமாக பதிவாகியுள்ளதாக  மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்

இந்நிலையினை தடுப்பதற்காக  மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் விழிப்புணர்வு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்  

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மென்டிஸ் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்படுத்தும் துவிச்சக்கர வண்டிகளுக்கு  விழிப்புணர்வு ஸ்டிகர் ஒட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய  மட்டக்களப்பு வாகன போக்குவரத்து பிரிவின்  மட்டக்களப்பு பிராந்திய பொறுப்பதிகாரி டி எம் எஸ் .கே  திஸ்ஸாநாயக தலைமையில்  மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் துவிச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிகர்  ஒட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன