மட்டக்களப்பில் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களுக்கான உள்ளுராட்சி மன்றங்களின் சட்டங்கள் தொடர்பான கொள்ளளவு விருத்தி பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பொதுநலவாய அமைப்பின் நிதியுதவியுடன் இது தொடர்பான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சிசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான உள்ளுராட்சி மன்றங்களின் சட்டங்கள் தொடர்பான கொள்ளளவு விருத்தி பயிற்சி நெறி மட்டக்களப்பு பார்வீதியில் உள்ள சட்டுத்த உயன விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எல்.புஹாரி முகமட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் என்.ஏ.எம்.ஹக்கீம் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் காத்தான்குடி,ஏறாவூர் நகரசபை உறுப்பினர்களும் ஓட்டமாவடி,மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் திட்டமுகாமையாளர் ஜரீனா ரபீக் மற்றும் திட்டஉத்தியோகத்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.