(லியோன்)
விளையாட்டு மற்றும் உடல் உளநல மேம்படுத்தலை முன்னிட்டு
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக நலன்புரி சங்கத்தின் ஒழுங்கமைப்பில் அலுவலக உத்தியோகத்தர்களுக்கிடையில்
2018 ஆம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இல்ல விளையாட்டு விழா மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர்
கே .பாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது .
அலுவலக மற்றும் திணைக்களங்களின் உத்தியோகத்தர்களின் உடல் உளநலனை மேம்படுத்தும்
வகையில் நடத்தப்பட்ட பல வினோத விளையாட்டு நிகழ்வில் கல்வி சாரா ஊழியர்கள்
.,பாடசாலை மானவர்கள ,திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோர் போட்டிகளில் கலந்து
விளையாட்டு நிகழ்வினை சிறப்பித்தனர்
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , சிறப்பு
அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி என் . கிரேஸ் மற்றும் அதிதிகளாக ஒய்வு நிலை
கல்விப்பணிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்
நிகழ்வில் அதிபர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள் ,வலயக்கல்வி அலுவகல
உத்தியோகத்தர்கள் ,கல்விசார ஊழியர்கள்
,அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் கலந்துகொண்டனர்
.