ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரிக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

மட்டக்களப்பு,ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இது தொடர்பான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு தாழங்குடா கல்வியியல் கல்லூரியில் வெகுவிமர்சையான முறையில் நடைபெற்றது.

உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் தொழில்நுட்பட துறையில் அதிகளவான மாணவர்களை உருவாக்கிவரும் அரச கல்வி நிறுவனங்களில் ஒன்றான மட்டக்களப்பு,ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியானது இம்முறை அதிகளவான மாணவர்களை உள்ளீர்த்துள்ளது.

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா,உயர் தேசிய தகவல் தொழில்நுட்பம் டிப்ளோமா,உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா,உயர் தேசிய ஹோட்டல் முகாமைத்துவ டிப்ளோமா ஆகிய பாடநெறிகளுக்கு முழு நேரமாகவும் பகுதியளவிலும் கற்கைகளுக்காக மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

இம்முறை 1800 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றபோதிலும் கல்லூரியின் இடவசதியனை கருத்தில்கொண்டு பகுதியளவில் 400 மாணவர்களும் முழு நேர கற்கைகளுக்காக 400 மாணவர்களுமே உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு,ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தெரிவித்தார்.

இதனபோது மாணவர்கள் வரவேற்கப்பட்டதுடன் அதிதிகளும் வரவேற்பட்டதுடன் பிரதம அதிதிக கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.