மட்டக்களப்பு மாவட்டத்தில் இலவசக் கல்விச் சேவையினை இடைவிடாது தொடரும் கிழக்கின் இளைஞர் முன்னணி.

தமிழர் பிரதேசங்களில் இடைவிடாது தங்களுடைய சேவையினை வழங்கிவரும் கிழக்கின் இளைஞர் முன்னணியின் (.பொ.) சாதாரணதர மாணவர்களிற்கான வருடாந்தம் நடாத்தப்படும் இலவசக்கல்விக் கருத்தரங்கு தொடரின் 2018ம்  ஆண்டிற்கான முதலாவது தொடர் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களின் திட்டமிடலில் இம்மாதம் 12ம்\>13ம்(வைகாசி)2018 ம் திகதிகளில் இடம்பெற்றது.


படுவான்கரைப் பிரதேசத்தில் காணப்படும் 16 பாடசாலைகளைச் சேர்நத சுமார் 400ற்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயனடைந்திருந்தனர். கணிதம்ரூபவ் விஞ்ஞானம்ரூபவ் வரலாறுரூபவ் தமிழ் ஆகிய பாடங்களை உள்ளடக்கியவாறு நடைபெற்றிருந்தது. மாணவர்களிற்கான கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டிருந்ததுடன் தேர்ச்சியான ஆசிரியர்களின் தெழிவூட்டல்களுடன் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் கருத்தரங்கில் மாணவர்களிற்கு கருத்து தெரிவிக்கையில்...கிழக்கின் இளைஞர் முன்னணியினால் கடந்த வருடங்களில் நடாத்தப்பட்ட பல இலவசக் கல்விக்கருத்தரங்குத் தொடர்கள் மூலம் (.பொ.) சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளில் குறிப்பிடக்கூடியளவிற்கு முன்னேற்றத்தினை எம்மால் அவதானிக்கக் கூடியதாயிருக்கின்றது. எமது முன்னணியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் இதனைப் பார்க்கின்றோம்ரூபவ் அத்தோடு உத்வேகத்துடன் செயற்படும் ஆர்வத்தினையும் எமக்கு வழங்குகின்றது2018ம் ஆண்டின் இறுதியில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் உங்களிற்கான முதலாவது தொடராக இக் கருத்தரங்குத் தொடர் அமையவிருக்கின்றது. திறமையான ஆசிரியர்களைக் கொண்டு தொடர்ச்சியாக இக்  கருத்தரங்கினை நடாத்த திட்டமிட்டிருக்கின்றோம். எனவே பலரின் கடின உழைப்பினூடாகவே இவ் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தாங்கள் அனைவரும் இக்கருத்தரங்கினையும் ரூபவ் இனிவரும் காலங்களில் இடம்பெறவிருக்கும் கருத்தரங்குகளையும் சரியாக பயன்படுத்துவீர்கள் என நம்புகின்றேன்.

எமது மாவட்டத்தில் எமது தமிழ்ச் சமூகத்தின் கல்வி நிலையினை உயர்த்துவதன் மூலமே சகல வழிகளிலும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எமது சமூகத்தினை அனைத்து வழிகளிலும் முன்னேற்றமடையச் செய்யலாம் எனும் நோக்குடன் ஆசிரியர் வளம் குறைவாக உள்ள பிரதேசங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் கல்வியில் முன்னேற தடையாக உள்ள பிரதேசங்களை உள்ளடக்கியவாறு இக் கருத்தரங்கு எம்மால் திட்டமிடப்பட்டிருக்கின்றதுமுhணவர்கள் எதிர்நோக்கும் முதலாவது படிக்கல்லான சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்களை சிறந்த சித்தியினை பெறவைப்பதோடு சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதே எமது குறிக்கோள்.

எனவே மாணவர்களாகிய நீங்கள் இவ் சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி கல்வியில் ஆர்வத்தினை அதிகரித்து பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதே எமது முயற்சிக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவாக நான் கருதுகின்றேன். கலாநிதி அப்துல்கலாம் அவர்கள் கூறியது போன்று நீங்கள் என்னவாக வர விரும்புகின்றீர்கள்ரூபவ் உங்களுடைய சமூகம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றி கனவு காணுங்கள்.

கல்வியே எமக்கான அங்கீகாரத்தை சகல இடங்களிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த வழி ஆகும். இதனை அனைத்து மாணவர்களும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். அது மட்டும் அல்லாமல் எமது கிழக்கின் இளைஞர் முன்னணி அமைப்பில் எமது மாவட்டத்தின் சகல பிரதேசங்களினையும் சேர்ந்த இளைஞர்ரூபவ் யுவதிகள் இணைந்து உத்வேகத்துடன்
செயற்பட்டு வருகின்றனர்

எமது செயற்பாடுகள் கல்வியினோடு மட்டும் நின்றுவிடாமல் எமது சமூகத்தினை
சுகாதாரம்ரூபவ் விளையாட்டுரூபவ் கலைரூபவ் கலாச்சாரம் ஆகிய சகல துறைகளிலும் படியுயர்த்தும் நோக்கில் இயங்கி வருகின்றது. எம்முடன் இணைந்து செயற்படுபவர்கள் சமூகத்தினை முன்னேற்றுவதுடன்ரூபவ் தங்களுடைய வாழ்க்கையினையும்
சிறந்த முறையில் அமைத்துக்கொள்வதற்கான வழிகாட்டல்களையும் வழங்குகின்றோம். மாணவர்களாகிய நீங்களும் எம்முடைய சமூகத்தில் அக்கறையுடையவர்களாக திகழ வேண்டும் அவ்வாறு திகழ்ந்தாலே எம்முடன் சேர்ந்து எமது சமூகத்தையும் முன்னேறச் செய்யலாம். அதுவே உண்மையானதும் நிலைபேறானதுமான முன்னேற்றமாகும்.