“சமுர்த்தி சிப்தொர “ கல்விக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு


(லியோன்)

சமுர்த்தி  அபிவிருத்தி திணைக்களத்தினால் மாணவர்களுக்கான  “சமுர்த்தி சிப்தொர “ கல்விக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது
 .

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  சமுர்த்தி  வங்கி கிளைகள் ஊடாக நடத்தப்பட நேர்முக தேர்வில் தெரிவு  செய்யப்பட  சமுர்த்தி உதவி பெரும் பயனாளிகளின்  46 பாடசால மாணவர்களுக்கான “சமுர்த்தி சிப்தொர “  புலமைப்பரிசில்  கல்விக்கான ஊக்குவிப்பு  கொடுப்பனவும்  வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே குணநாதன்  தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது . 

இந்த கொடுப்பனவானது i2017 ஆம் ஆண்டு தொடக்கம்    2019 ஆம் ஆண்டு வரையிலான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் செயற்படும் சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தின் சமுர்த்தி சுரக்ஸா வேலைத்திட்டத்தின் ஒரு பிரிவான “சமுர்த்தி சிப்தொர “  புலமைப்பரிசில் கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகின்றன

இந்த  திட்டத்தின் கீழ் 2017 ஆண்டு கல்வி பொது சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த சமுர்த்தி  உதவி பெரும் பயனாளிகளின்  மாணவர்களில்  உயர்தர  கல்வியை தொடர்கின்ற மாணவர்களுக்கான கல்விக்கான ஊக்குவிப்பு தொகையாக  வழங்கி வைக்கப்பட்டது   

இந்த கல்விக்கான ஊக்குவிப்பு நிதியானது சமுர்த்தி  அபிவிருத்தி வங்கி ஊடாக   மாதாந்தம் தலா  1500  ரூபா வீதம் மாணவர்களின் உயர்தர  கல்வியை நிறைவு செய்யும் வரை  இந்த கொடுப்பனவுகள்  வழங்கப்படவுள்ளன .

இந்நிகழ்வில்   மண்முனை வடக்கு வாழ்வின் எழுச்சி  முகாமைத்துவ பணிப்பாளர்  திருமதி . கிரிதராஜ் நிர்மலா , மண்முனை வடக்கு வாழ்வின் எழுச்சி தலைமையாக முகாமையாளர்  திருமதி. கலைச் செல்வி வாமதேவன்  , கருத்திட்ட முகாமையாளர் திருமதி கே . சுபந்தினி ,சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம் சாருலதா , சமுர்த்தி  வங்கி முகாமையாளர்களான திருமதி குமுதினி இருதயதாசன் , கே நவரஞ்சன்  , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,மாணவர்கள் , பெற்றோர்  ஆகியோர் கலந்துகொண்டனர் .