கற்றலில் மாணவர்களை பங்குபெற செய்யும் ஆசிரியரும் பங்குபெறும் மாணவர்களும்.



கற்றல் கற்பித்தலில்  மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருவரில் ஒருவர் இன்றியமையாதவர்களாவர். அந்தவகையில் இவர்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்களாவர். “கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்களை பங்குபெறச் செய்யும் கல்வியையும் கற்கும் மாணவர்கள் பங்குபெறும் கல்வியையும் பெறும் வகையில் அமையும்போதே அது நிலைத்த, சிறந்த கல்வியகவும் கற்கையாக அமையும்.

 ஆசிரியரானவர் கற்றலில் மாணவர்கள் பங்குபெற பல வழிமுறைகளை மேற் கொள்ளவேண்டும். கலைத்திட்ட பாட விதானத்திற்கு ஏற்பவும், பாடவிதானம் தவீர்ந்த ஏனைய இணைப்பாடவிதான வழிமுறையின் மூலமும் இதனை மேற்கொள்ளமுடியும்.

மேலும் இந்த ஏட்டுக் கல்வியோடு நின்றுவிடாது பங்குபற்றல் சார்ந்த கல்வி முக்கியமானதாக இருக்குமாயின் அது மாணவனின் உயர்வில் மிக முக்கிய இடத்தை வகிக்கும்.

உதாரணமாக பாடசாலையில் வகுப்பறை கற்பித்தலில் கலைத்திட்ட பாடபுத்தகத்தின் ஒரு தலைப்பின் கீழ் கற்பிக்கும் கல்வியை அவ் தலைப்பின் கீழ் மாணவர்களை தேடச்செய்து  அதன் மூலம் கற்பித்தலை மேற்கொள்ளல் இது ஆசிரியரால்  மாணவர்களை கல்வியில் பங்குபெற செய்ய முடிமாக இருக்கும்.


மேலும் இவ் கற்பித்தலில் மாணவர்களை பங்கு பெறச்செய்யும்  ஆசிரியர் எனும் போது குறிப்பாக பாடசாலை வகுப்பறை பாடவிதான பாடப் புத்தக தலைப்பின்  அடிப்படையில் மாணவர்களை குழுக்களாக பிரித்து பாடம் சம்மந்தமான விவாதங்களில் பங்குபெற செய்யும் போது ஒதுங்கி  பின்வாங்கும் மாணவர்களை விரும்பியோ விரும்பாமலோ பங்கு பெற ஆசிரியர் வழிவகுக்கின்றார்.

 அத்தோடு மாணவர்கள் குழு விவாதங்களில் கலந்து கொள்ளும் போது மாணவர்களிடையே தன்நம்பிக்கை ஏற்படுகின்றது.

இதன் மூலமாக மன ரீதியாக தன்னார்வமும், தானாக செயற்படும் ஆற்றலும் ஏற்படுகின்றது.

 அத்தோடு புதிய தேடலும், பல்வேறு மாணவர்களின் கருத்துக்களையும்  அறிவினையும் பெறக் கூடியதாகவும் அமையும் இதுவே மாணவர்கள்  பங்கு பெறல் ஏற்படுகின்றது.

மேலும் பாடவிதானம் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளிலும் மாணவர்களை பங்கு பெற செய்வதன் மூலமும் சிறந்த பங்கு பெற்றலை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

 அந்த வகையில் விளையாட்டுப்போட்டி, தமிழ்தினப்போட்டி, ஆங்கில போட்டி வினாவிடைப்போட்டி, வாணிவிழா, பெரியோரின் நினைவு தினம், சுற்றாடல் கழகம் அமைத்தல், சுகாதார கழகம், சாரணர்படையணி, வெளிக்கள ஆய்வு செயற்பாடுகள், மாணவத் தலைவர்களாகவும் இயங்குதல்  போன்ற பல்வேறு சந்தர்பங்களின் மூலமாக மாணவர்களை பங்கு பெற செய்வதன் மூலம் மாணவர்கள் பங்கு பெறுவார்கள்.

இதனால் பல பங்கு பற்றல் கல்வியினால் மாணவர்களிடையே பல  கற்பித்தல் கற்றலில் பல நன்மைகள் ஏற்படுகின்றது.

அந்த வகையில் மாணவர்களிடையே பின்வாங்கி ஒதுங்கிப்போகும் தன்மை, சபைக் கூச்சம் போன்றன இல்லாது போவதோடு, ஏனைய மாணவர்களுடன் சகஜமாக பழகும் தன்மை மற்றும் சக மாணவர்களுடன் குழு செயற்பாடுகளில் இணைந்து கொள்ளும் தன்மை ஏற்படுகின்றது. அத்தோடு சிந்தனைத்திறன், பேச்சாற்றல் திறன், முன்வரும் ஆற்றல், தேடலில் ஈடுபடும் ஆற்றல், உடல் உள மன ரீதியிலான ஆளுமை, கற்பனை வளம் உருவாகுதல், மனதில் கற்றல் நிலைத்து நிற்றல் சார்ந்ததாகவும் அமையும் .

அத்தோடு போட்டித்தன்மை கூடியவர்களாகவும், தொழினுட்ப அறிவாற்றல் கொண்டவர்களாகவும் சிறந்த பெறுபேறுகளை பெறக்கூடியவர்களாகவும் இருப்பர் இதனால் மேலும் மேலும் பங்கு பெற வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் இவ்வாறான பல நன்மைகள்  மாணவர்கள் வளமாக்கப்பட்டு பங்குபெறுவதனால் ஏற்படுகின்றது.

இருப்பினும்  இவ் பங்குபெறச் செய்தல் பங்குபெறல் கல்வியில் பல குறைகள் காணப்படுகின்றது. அந்தவகையில் ஆசிரியருக்கு ஒதுக்கப்படும் பாடவேளைக்கான  நேரம் போதாமையும் காலதாமதமும் ஏற்படுவதோடு போதிய வளங்கள்  இல்லாத நிலை ஏற்படுதல், கற்றல் கற்பித்தலுக்கு போதிய இடவசதி இன்மை, செலவீனங்கள்  ஏற்படுதல், மாணவர் விசேட தேவை உடைய மாணவர்கள் பங்கு பெறுவதில் சிக்கல்களையும் சவால்களையும் எதிர்நோக்க கூடியதாக இருத்தல்,  போன்ற பல்வேறு குறைபாடுகளைக் கூறிக்கொண்டே போகலாம்.

எவ்வாறாயினும் இப்பங்குபெறச் செய்தல் மாணவர்கள் பங்குபெறல் கல்வியில் ஆசிரியரரானவர் பங்கு பெறல் சார்ந்த பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் நேர முகாமைத்துவத்திற்கு ஏற்ப கற்பித்தல் முறைமையை ஒழுங்குபடுத்தல், மாணவரின் ஆர்வத்தை தூண்ட கூடிய பரிசளிப்பு, பாராட்டுக்களை மேற்கொள்ளல் அறிவுரைகளையும் வழிமுறைகளையும் ஏற்படுத்தல், மற்றும் போதிய வளங்களையும், சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்துவதன் மூலமும் இவ்வாறான  பல்வேறு மாற்றங்கள் செய்வதன் மூலம் சிறந்த மாற்றத்தை மாறுதலையும் கல்வியில் ஏற்படுத்த முடியும்.

எனவே கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படையில் இருந்தே பங்குபெறச் செய்து அறிவையும் அனுபவத்தையும், ஆற்றல்களையும் வளர்க்க வேண்டியது கல்விசார் பேராசிரியர்களினதும் அறிஞர்களினதும் அனைவரினதும் உளக்கிளர்ச்சியாகும்.

எனவே மாணவர்களை பங்குபெறச் செய்யும் ஆசிரியர்களும் மாணவர்  பங்கு பெறும் கல்வியை கல்விக்கூடங்களும்  கல்வி அதிகாரிகளும் கல்வித்துறை சார்ந்த அனைவரினதும் நெஞ்சில் நிறுத்தி திட்டமிட்டு செயற்பட வேண்டியது எனது முன்மொழிவு கருத்தாகும்..  
     
                   
           கோ. கோகுலநாதன்,
             பிள்ளை நலத்துறை,
             இரண்டாம் வருட மாணவன்,
              கிழக்கு பல்கலைக்கழகம்.