மாணவ தலைமைத்துவ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு


(லியோன்)

ஒரு சமுகத்தின் அடித்தளம் அதன் தலைமைத்துவத்தின் மீதே கட்டியெழுப்பப் படுகின்றது எனும் தொனிப்பொருளில் உங்களுக்கு நீங்களே தலைவராக இருங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கான  இரண்டு  நாள் வதிவிட பயிற்சி  பட்டறை  மட்டக்களப்பு  மகாஜன கல்லூரியில் நடைபெற்றது .


மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ஆலோசனை வழிகாட்டலின் கீழ்  வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டல்  ஆலோசகரும் ,வளவாளருமான எ .ஜெகநாதன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவ தலைவிகளுக்கான  இரண்டு  நாள்  தலைமைத்துவ பயிற்சிகள் நடத்தப்பட்டு  இன்று   தலைமைத்துவத்திற்கான  சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது

மட்டக்களப்பு மகாஜன கல்லூரி  அதிபர்  அருமைராஜா  தலைமையில் நடைபெற்ற இரண்டு நாள்  வதிவிட பயிற்சி பட்டறையில் வளவாளர்களாக  கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் டி .ரவி , கல்குடா வலயக் கல்வி அலுவலக உளவளத்துணை தொழில் வழிகாட்டி உத்தியோகத்தர் டி .விஷ்வ ஜிந்தன், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக சேவைக்கால ஆலோசகர் ஜி கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர்  கலந்துகொண்டனர் .

மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இரண்டு நாள்  தலைமைத்துவ பயிற்சி பட்டறையின்  இறுதி நாளான இன்று மாணவ தலைமைத்துவத்திற்கான  சான்றிதழ்கள்  வழங்கும் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில்  நடைபெற்றது