மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான இல்ல விளையாட்டு விழா

 (லியோன்)

விளையாட்டு மற்றும் உடல் உளநல மேம்பாட்டு தேசிய வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான இல்ல விளையாட்டு விழா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது .


அரச திணைக்கள உத்தியோகத்தர்களின் உடல் உள நலத்தினையும் , குழு செயல்பாட்டினையும் மேம்படுத்தும் வகையில் இந்த இல்ல விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது .

இந்நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர 
முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் பிரதேச செயலாளர்கள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்