மாகாண மட்ட தமிழ்மொழித் தின போட்டிகள்


(லியோன்)

அகில இலங்கைத் தமிழ்மொழித் தினம் 2018 ஆண்டுக்கான மாகாண மட்ட போட்டிகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


கிழக்குமாகாண கல்வித்தினைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ் மனோகரன் தலைமையில் மாகான மட்ட தமிழ்த்தின போட்டி நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வு  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது

இன்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வு போட்டியில் மாணவர்களுக்கான  வாசிப்பு , பேச்சு , எழுத்தாக்கம் , பாஒதல் , இசையும் அசையும் , இலக்கிய விமர்சனம் , ஆக்கத்திறன் வெளிப்பாடு போன்ற போட்டிகள் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மாகாண கல்வி திணைக்கள உதவி கல்விப் பணிப்பாளர் எஸ் உதயகுமார் ,மாகாண தமிழ் மொழி உதவி கல்விப் பணிப்பாளர் கே விக்னராஜா , மட்டக்களப்பு வலய பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி . சுஜாதா குலேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்