களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தாதியர் தின நிகழ்வு

சர்வதேச தாதியர் தினம் நேற்று இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்று சர்வதேச தாதியர் தினம் சிறப்பான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தினம் வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்களினால் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.சுகுணன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதன்போது தாதியர்களின் பல்வேற நிகழ்வுகள் நடைபெற்றதுடன் தாதியர்களின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள்,வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினர் என பலர் கலந்துகொண்டனர்.