“பாடு மீன்களின் சமர் ” தொடர்பான ஊடக சந்திப்பு


(லியோன்)

எதிர் வரும் ஜூன் மாதம் 9 ஆம்    10 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள பாடு மீன்களின் சமர் என வர்ணிக்கப்படும் 8வது கிரிக்கெட்  சமர்  தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு  (01) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல கல்லூரிகளான மட்டக்களப்பு புனித  மிக்கேல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆகிய கல்லூரிக்கிடையில் ஜூன் மாதம் 9 ஆம்    10 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு  கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலய மைதானத்தில்  நடைபெறவுள்ள பாடு மீன்களின் சமர் இரண்டு நாள் கிரிகெட் பிக் மெச் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித  மிக்கேல் கல்லூரி அதிபர்கள் தலைமையில்  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் நடைபெற்றது

மட்டக்களப்பு  எரோ நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியினால் முன்னெடுக்கின்ற  பாடு மீன்களின் சமரின்  அனைத்து வேலைகளும் நடைபெற்று வருவதாக கல்லூரி அதிபர்கள் தெரிவித்தனர்

ஊடகவியலாளர் சந்திப்பில் புனித  மிக்கேல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா , மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் ஆர் .பாஸ்கரன் , எரோ நிறுவனத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி ஹபிப் ரிபான் மற்றும் இரண்டு கல்லூரிகளின்  பழைய மாணவர்கள் ,  எரோ நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்