சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான இலவசக் கண் பரிசோதனை


(லியோன்)

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் 98 ஆம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் பாடசாலை கல்வி பயிலும்  2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான இலவசக் கண் பரிசோதனை நிகழ்வு  இன்று பாடசாலை பிரதான மணடபத்தில் நடைபெற்றது .


சிவானந்தா பாடசாலை பழைய மாணவர்கள் பல சமூக பணியினை முன்னெடுத்து வருகின்ற நிலையில்  பாடசாலையில் கல்வி பயிலும்  மாணவர்களின் சிறந்த பார்வையை பேணும் நோக்கில் மாணவர்களின் வாசிப்பு திறன் , வாசிப்பின் போது தலையிடி ஏற்படுதல் , வாசிப்பு வேகம் ,வாசிப்பின் கண்ணில் நீர் வடிதல் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இலவச கண் பரிசோதனை நிகழ்வினை சிவானந்தா தேசிய பாடசாலையின் 98 ஆம் வருட மாணவர்களின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ,கண் சிகிச்சை நிபுணர் வைத்தியர் பி . ஸ்ரீஹர நாதன் , பாடசாலை அதிபர்  மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் கலந்துகொண்டனர்