வேலையற்ற பட்டதாரிகளின் மாபெரும் எதிர்ப்புப் பேரணி.

(மண்டூர் நிருபர்) நேர்முக தேர்வில் பெறப்பட்ட புள்ளி அடிப்படையை இரத்து செய்து பட்டம் பெற்ற வருட அடிப்படையில் வழங்கவேண்டும் எனவும், அரசாங்கம் வழங்கிய போலி வாக்குறுதிகளுக்கு எதிராகவும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும்
2012-2017 வரையும்பட்டம் பெற்ற பட்டதாரிகள் ,35வயதெல்லை பட்டதாரிகள் ,HNDA பட்டதாரிகள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து   

கடந்த செவ்வாய்க் கிழமை (08.05.2018) கொழும்புகோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால்  பாரிய எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோதே பொலிஸார் கண்ணீர் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்ட போராட்டங்கள் மூலமே தொழிலுக்கான தீர்வுகளில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.