வெல்லாவெளியில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணத்திற்கான பிரதான சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசபையின் முன்பாக சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஆரம்பமான பேரணியுடன் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் ஆரம்பமானது.

வெல்லாவெளி பிரதேசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் பாராளுமன்ற,மாகாணசபை உறுப்பினர்கள்,தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாநகரசபை மற்றும் பிரதேசசபையின் தவிசாளர்கள்,பிரதி தவிசாளர்கள்,உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் மட்;டக்களப்பிலும் நடாத்தப்படுகின்றது.

அதற்கமைய நடைபெற்ற இன்றைய பேரணியில் தொழிலாளர்களின் உரிமையினை வலியுறுத்தும் மாபெரும் பேரணியானது போரதீவுப்பற்று பிரதேசபை முன்பாகஆரம்பமானது.

இந்த பேரணியில் விவசாயிகள் மற்றும் மீன்பிடி உட்பட பல்வேறு தொழிலாளர்களினை நினைவுபடுத்தும் வகையிலான வாகன ஊர்திகளும் பங்குகொண்டன.

அதனைத்தொடர்ந்து வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தில் மேதின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.