எர்பெட் சவால் 2018 வெற்றிக்கிண்ணத்தை யாழ்பாணம் பாடசாலை சுவிகரித்துக்கொண்டது.


 (லியோன்)

அகில இலங்கை ரீதியில் முதல் முறையாக பாடசாலைகளுக்கிடையில் எர்பெட் சவால் கிண்ணம்  2018  கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் மட்டக்களப்பில் நடைபெற்றது .


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர்களின் தாய் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட  எர்பெட் சவால் கிண்ணம்  2018 கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அகில இலங்கை ரீதியில் இருந்து 8 பாடசாலைகள் கலந்துகொண்டன .

கடந்த 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி உள்ளக அரங்கில் நடைபெற்ற  கூடைப்பந்தாட்ட சுற்றுபோட்டியில் அகில இலங்கை ரீதியாக யாழ்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை , நீர்கொழும்பு மாரி ஸ்டெல்லா கல்லூரி , கொழும்பு எட்டு வெஸ்லி கல்லூரி , கொழும்பு பத்து சாஹிரா கல்லூரி , கண்டி டிண்டி கல்லூரி , பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரி , காலி  மகிந்த கல்லூரி , மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஆகிய எட்டு பாடசாலைகள்  இந்த சுற்றுபோட்டியில் கலந்துகொண்டன

 (30) மாலை புனித மிக்கேல் கல்லூரி உள்ளக அரங்கில் நடைபெற்ற   2018 ஆம் ஆண்டுக்கான எர்பெட் சவால்  வெற்றிக்கிண்ண இறுதி போட்டியில் மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பெற்றுக்கொண்டனர் .

இரண்டாம் இடத்தினை  நீர்கொழும்பு மாரி ஸ்டெல்லா கல்லூரி பெற்றுக்கொண்டது .

2018 எர்பெட் சவால் கிண்ண கூடைப்பந்தாட்ட  சுற்றுபோட்டியின் இறுதி போட்டியில்  விளையாடிய யாழ்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை ,மற்றும்  நீர்கொழும்பு மாரி ஸ்டெல்லா கல்லூரி  79- 67 என்ற புள்ளிகள் என்ற அடிப்படையில் 12 புள்ளிகளினால் வெற்றி பெற்று 2018ஆம் ஆண்டுக்கான  எர்பெட் சவால் கிண்ணத்தை யாழ்பாணம் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை சுவிகரித்துக்கொண்டது

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை , இயேசு சபை துறவி அருட்பணி போல் சற்குணநாயகம் , மிக்கேல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா , புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர்களின் தாய் சங்க தலைவர் அருட்பணி நவரெட்ணம் மற்றும் மிக்கேல் கல்லூரி பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர் .