சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை


(லியோன்)

சித்திரை  புதுவருடத்தை  முன்னிட்டு  மட்டக்களப்பு வவுணதீவு  பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி டி . நசிர் தெரிவித்தார் .


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி டி நசிர் வழிகாட்டலின் கீழ் தமிழ் சிங்கள  சித்திரை  புதுவருடத்தை  முன்னிட்டு  வவுணதீவு பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டத்திற்கு முரணான வகையில் அனுமதி பத்திதிரம் இன்றி முற்சக்கர வண்டியில் ஆடு கொண்டு செல்லப்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார் .

சித்திரை  புதுவருடத்தை  முன்னிட்டு  மட்டக்களப்பு வவுணதீவு  பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் மது போதையில் வாகனத்தை செலுத்திய மூன்று நபர்களும்  மற்றும் சாரதி அனுமதி பத்திரம் , தலைகவசம் இன்றி வாகனம் செலுத்தியமை ஆகிய குற்ற சாட்டில் ஏழு பேரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை   செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

இதேவேளை வவுணதீவு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் கீழ் காஞ்சிரங்குடா   மற்றும் பாவக்கொடிச்சேனை பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையின் போது  கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்  கோடா மற்றும் அதற்காக பயன்படுத்தும் பேரல்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் உற்பத்தியில் ஈடுபட்ட  நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் குறித்த நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி   தெரிவித்தார் .

இந்த  விசேட சோதனை நடவடிக்கையின்  போது கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபவர்களுக்கு எதிராக நீதிமன்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்  வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி டி . நசிர் தெரிவித்தார் .