மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் உயிர்ப்பு ஞாயிறு வழிபாடுகள்

கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் பெரு நாளை முன்னிட்டு தேவாலயங்களில் நேற்று சனிக்கிழமை இரவு விசேட பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன.
ஜேசுக்கிறிஸ்த்து உயிர்த்ததை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் நேற்று விசேட பூஜைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின புனித ஈஸ்டர் பெருவிழா பிரதான வழிபாட்டு நிகழ்வுகள் மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இந்த வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது இருளில் இருந்த உலகத்திற்கு ஒளியை ஏற்படுத்தியதுபோன்று ஜேசுபிரான் மீள உயிர்பெற்றதை குறிக்கும் வகையில் மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு புதிய நெருப்பு ஆசிர்வதிக்கப்பட்டு ஒளியேற்றப்பட்டு உயிர்ப்பு நினைவூட்டப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட ஆராதனைகள் நடைபெற்று பாஸ்காதிரி நீரில் நனைக்கப்பட்டு நீர் ஜெபிக்கப்பட்டு மக்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்டது.

இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.