கல்லடி வேலூர் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு,கல்லடி வேலூர் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் நேற்று  மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.


கடந்த சனிக்கிழமை கதவு திறத்தலுமடன் ஆரம்பமான ஆலயத்தின் திருச்சடங்களில் தினமும் விசேட பூஜைகள் மற்றும் தெய்வமாடல் நிகழ்வுகள் நடைபெற்றுவந்தன.

நேற்று முன்தினம்  மாலை அன்னைக்கான விசேட நிகழ்வான நெல்குத்தும் சடங்கு நடைபெற்றதுடன் இதில் பெருமளவான பெண்கள் கலந்துகொண்டு தமது நேர்கடனை செலுத்தினர்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆலயத்தில் அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் தெய்வாதிகள் புடைசூழ சமுத்திரத்தில் கடல் குளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஆலயத்திற்கு வந்த தெய்வாதீகள் மற்றும் பக்தர்கள் புடைசூழ தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தீமிதிப்பு உற்சத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன் தீமிதிப்பு உற்சவத்தினை காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.