பூநகரி இளைஞர் முகாம் இன்று ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச இளைஞர்யுவதிகளின் தலைமைத்துவ ஆற்றலை விருத்தி செய்யும் முகமாக இளைஞர்களை பயிற்றுவிக்கும் இளைஞர் முகாம் வேலைத்திட்டம் இன்று (27) ஆரம்பிக்கப்படவுள்ளது.


ஜெயபுரம் விவசாய பண்ணை வளாகத்தில்  இளைஞர் சேவை அதிகாரி திரு
அ.ஜெயாளன் ஒழுங்கமைப்பில் பூநகரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இம் முகாம் வேலைத்திட்டத்தில் 100 இளைஞர் யுவதிகள் பங்குபற்றவுள்ளனர்.

இன்று 27ம் திகதி ஆரம்பமாகும் இளைஞர் முகாம் எதிர்வரும் 29.04.2018 ம் திகதி பிரதேச சம்மேளன புதிய நிருவாகத் தெரிவுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.