பாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூக மயபடுத்தும் பலகாரச் சந்தை


 
(லியோன்)

பாரம்பரிய உணவு காலாசாரத்தை
  சமூக மயபடுத்தும்  பலகாரச்  சந்தை  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில்   இன்று இடம்பெற்றது


மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஒழுங்கமைப்பில்  பாரம்பரிய உணவு காலாசாரத்தை  சமூகமயபடுத்தும்  நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்   பலகாரச் சந்தையும் விற்பனையும் மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில்   நடைபெற்றது .

தமிழர்களின் பாரம்பரிய உணவு கலாசாரத்தினையும்  , மக்களின்  சுகாதாரத்துடனான   போஷாக்கினையும்    மற்றும் பொருளாதாரத்தினையும்  வலுப்படுத்தும் நோக்குடன் சித்திரைப்  புத்தாண்டை அடிப்படையாகக் கொண்டு பாரம்பரிய உணவு உற்பத்தியினையும்   பாரம்பரிய   உணவு தொடர்பான   உணவுசார் செயல்பாடுகளை மீண்டும்  ஊக்குவித்தது  சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வாக   இந்த பலகாரச் சந்தை நிகழ்வு   இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு  பிரதேச செயலக   கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ் .தில்லைநாதன்   உட்பட பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் கலாசார உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர் .