சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தக கண்காட்சி ம.தெ.எ பற்று பிரதேச செயலகத்தில்


தமிழ் சிங்கள புது வருடத்தினை முன்னிட்டும் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மாபெரும் சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தக கண்காட்சி  இன்று(11.04.2014) புதன்கிழமை ம.தெ.எ பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தக கண்காட்சி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.சிவப்பிரியாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உள்ளுர் உற்பத்தியாளர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை அறிமுகப்படுத்துவதுடன் அதனை விற்பனை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.