மட்டக்களப்பு பொலிஸ் திணைக்கள சித்திரை புதுவருட நிகழ்வு


  (லியோன்)

மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு  மாவட்ட 12 பொலிஸ் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையிலான சித்திரை புதுவருட  கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்  கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  எச் .டி .கே .எஸ் கபில  ஜயசேகர தலைமையில் இன்று மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெற்றது 
 

இடம்பெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட  பிராந்திய பொலிஸ் நிலைய  பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் , சிறுவர்களினதும்  பல வினோத விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக  மட்டக்களப்பு அம்பாறை பிரதி பொலிஸ்மா அதிபர்  டி .ஐ .ஜி .ஜெயகொட ஆராச்சி,  மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்ன  ,மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தீகா வதுற  , மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்பு குழு தலைவர்  ஸ்டீபன் ராஜன் மற்றும்  இந்நிகழ்வில் மட்டக்களப்பு 12 பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் , பொலிஸ்  உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப உறுப்பினர்கள், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ,என பலர்  கலந்துகொண்டனர்    


,