ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு மட்டக்களப்புக்கு விஜயம்


 (லியோன்)

ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பிய அபிவிருத்தி ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை  வடக்கு பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமாரினால்  கடந்த  ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்ட முன்ரங்க அலுவலகத்தை ஐரோப்பிய யூனியன் அபிவிருத்தி ஒன்றியத்தின் பிரதிநிதி குழுவினரால்  இன்று பார்வையிடப்பட்டன
 

இந்த முன்ரங்க அலுவலகத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்த ஐரோப்பிய யூனியன் அபிவிருத்தி ஒன்றியத்தின்  பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முன்ரங்க அலுவலகம் ஊடாக அரச அதிகாரிகளுக்கும் மக்களுக்கும்  இடையேயுள்ள இடைவெளி , மக்களுக்கான வினைத்திறன் மிக்க சேவைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரினால் விளக்கமைளிக்கப்பட்டது 

இதன் போது பிரதேச செயலகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான முன்மொழிவு ஆவணங்களும்  பிரதேச செயலாளரினால் வருகை தந்த பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது .

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் கே .குணநாதன் , உதவி பிரதேச செயலாளர் .எஸ் .யோகராஜா , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,ஐரோப்பிய யூனியன் அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்