ஜந்து இலட்சம் பணப்பரிசு வென்றது அம்பிளாந்துறை பாரதி இளைஞர் கழகம்.

 (சசிதுறையூர்)        தேசிய இளைஞர்சேவைகள் மன்றம் நாடளாவிய ரீதியில் கடந்த வருடம்(2017)  நடைமுறைப்படுத்திய  "ஊருக்கு ஒரு கோடி சிரமசக்தி " வேலைத்திட்டத்தின் கீழ்  வேலைத்திட்டத்திட்மொன்றை நடைமுறைப்படுத்திய அம்பிளாந்துறை பாரதி இளைஞர் கழகம் சிறப்பாக வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினை பெற்று ஜந்து இலட்சம் பணப்பரிசை தட்டிக்கொண்டது.

இன்று திங்கட்கிழமை 09.04.2018 அலரிமாளிகையில் பிரதமர் பங்குபற்றலுடன் நடைபெற்ற ஊருக்கு ஒரு கோடி துருணு சிரம சக்தி மக்கள் அபிவிருத்தி கருத்திட்ட மதிப்பீட்டு பரிசளிப்பு விழா
நிகழ்வின் போதே இந்த பரிசு வழங்கி வைழங்கப்பட்டது.

சிரம சக்தி வேலைத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் 3000 வேலைத்திட்டங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளடங்களாக 75 வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட இளைஞர் கழகமொன்றிற்கு 150,000.00 ரூபா நிதி வங்கப்படும். அந்த நிதியினை கொண்டு குறித்த இளைஞர் கழகம் 300,000.00(மூன்று இலட்சம்) ரூபாய்க்கு மேற்பட்ட பணப்பெறுமதியினை உடைய வேலைத்திட்ட மொன்றினை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் அம்பிளாந்துறை பாரதி இளைஞர்கழகம் தனது கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 120,000.00(பன்னிரண்டு இலட்சம்)  பணப்பெறுமதி உடைய பார்வையாளர் அரங்கு ஒன்றை நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வேலைத்திட்டத்தில் போரதீவுப்பற்று மன்டூர் கனேசபுரம் கண்ணகி இளைஞர் கழகம் நடைமுறைப்படுத்திய சிறுவர் மகிழ்ச்சி கூடம் வேலைத்திட்டம் இரண்டாவது இடத்தினையும்,

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவு , எருவில் கிராமசேவையாளர் பிரிவில் எருவில் வடக்கு இளைஞர் கழகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மைதான புனரமைப்பு வேலைத்திட்டம் மூன்றாவது இடத்தினையும் பெற்று  முறையே மூன்று இலட்சம், மற்றும் இரண்டு இலட்சம் பணப்பரிசில்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.