மண்முனை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசார் பற்றிய ஓர் ஆய்வு.


(S.t)

முழப்பெயர்: செல்லத்தம்பி சண்முகராஜா
வயது : 56
நாவற்காடு கிராமத்தை பிறப்பிடமாகவும் விளாவட்டவான் கிராமத்தை வசிப்பிடமாக கொன்டவர்.

# கல்வி

01ம் வகுப்பு தொடக்கம் 05ம் வகுப்பு வரை மட்/ நாவற்காடு நாமகள் வித்தியாலயம்.
06ம் வகுப்பு தொடக்கம் க.பொ.த(சா/த) வரை மட்/ சிவானந்தா தேசிய பாடசாலை.
(க.பொ.த(சா/த) பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் சித்தி)
க.பொ.த(உ/த) உயிரியல் பிரிவினை
மட்/ இந்துக் கல்லூரியிலும்.
கல்வி கற்றுள்ளார்.

# 1983,1984ல் ஈ/க/ப/நோ/கூ/சங்கத்தின்       நாவற்காடு கிளையின் நெல்             கொள்வனவு முகாமையாளராகவும்.
  1985 தெடக்கம் 1996 வரையான
  காலப்பகுதியில் நாவற்காடு தபால்
  கந்தோரில் உப- தபால் அதிபராகவும்.
  1998 தொடக்கம் 2016 வரையான
  காலப்பகுதியில் மண்முனை மேற்கு
  பிரதேச சபையில் சாரதியாக கடமை
  புரியும் போது 2013ம் ஆண்டு கிழக்கு
  மாகாண உள்ளூராட்சி மண்ற ரீதியில்
  நடைபெற்ற வருமான பரிசோதகர் (R.I)
  தெரிவுக்கான போட்டிப் பரீட்சையில்
  சித்தியடைந்து.  திருகோணமலை
  பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கு
  நியமனம் கிடைக்கப்பெற்றும் குடும்ப
  சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு
  தானாகவே விலகிக் கொண்டு
  வவுணதீவு பிரதேச சபையில் ஓய்வு
  பெறும் வரையும் சாரதியாகவே கடமை
  புரிந்துள்ளார்.

இவரை நடைபெற்று முடிந்த உள்ளூராச்சி சபைத் தேர்தலில் 04ம் வட்டாரத்தில் வேட்பாளராக களம் இறக்குவதற்கு பல கட்சிகள் போட்டி போட்டாலும் இறுதியில் தமிழ் தேசியத்திற்காகவே தான் களம் இறங்குவேன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு  பொருத்தமானதாக அமைந்துள்ளது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.