தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம்


கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு,தேற்றாத்தீவு அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு இன்று காலை இடம்பெற்ற தீமிப்புடன் நிறைவுபெற்றது.


தேற்றாத்தீவில் கடற்கரை வெண்மணல் பரப்பில் எழுந்தருளி பல ஆண்டுகாலமாக வடபத்திரகாளியம்பாள் அருள்பாலித்துவருகின்றார். கடந்த 01 .04.2018ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் உற்சவம் சிறப்பாக ஆரம்பமானது.அன்றைய தினம் பால்குட பவனி இடம்பெற்று அம்பாளுக்கு சங்காபிசேகம் செய்யப்பட்டு இந்த உற்சவம் ஆரம்பமானது.நான்கு தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கில் திங்கட்கிழமை வீரகம்பம் வெட்டுதல்,திருவிளக்கு பூஜை,அம்பாள் ஊர்வலம் என்பன நடைபெற்றன.அதன் கீழ் நேற்று செவ்வாய்க்கிழமை ஆலயத்தில் நோர்ப்பு நெல் குற்றுதல்,நவசக்தி யாகம்,நோர்ப்புக்கட்டுதல் நிகழ்வு மிகவும் பக்தி பூர்வமான நடைபெற்றது.

இறுதியாக இன்று காலை அம்பாளின் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.இன்று காலை அலங்கார பூஜை இடம்பெற்று இந்த தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றதுடன்.இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டதுடன் தீமிதிப்ப உற்சவத்திலும் பெருமளவான அடியார்கள் பங்குகொண்டனர்.