போரதீவுப்பற்று பிரதேசசபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம்

மட்டக்களப்பு மாவட்டத்தின்; போரதீவுற்றுப்பற்று பிரதேசசபையின் ஆட்சியதிகாரத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

18 உறுப்பினர்களைக்கொண்ட போரதீவுப்பற்று பிரதேசசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான சிதம்பரப்பிள்ளை ரஜனி தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பிரதி தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாராயணம்பிள்ளை தர்மலி;ங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

போரதீவுற்றுப்பற்று பிரதேசசபையின் அமர்வு இன்று கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது.
இன்றைய அமர்வாக அல்லாமல் தவிசாளரை தெரிவுசெய்யும் அமர்வாகவே நடாத்தப்ப்டது.

தவிசாளரை தெரிவுசெய்யும் போட்டியில் சுயேட்சைக்குழுவில் தெரிவான ஆயிஸ்மன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான சிதம்பரப்பிள்ளை ரஜனி ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவியது.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன இணைந்து சுயேட்சைக்குழுவில் தெரிவான ஆயிஸ்மனுக்கு  ஆதரவாக வாக்களித்தன.

இதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி ஆகிய உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான சிதம்பரப்பிள்ளை ரஜனிக்கு வாக்களித்தனர்.

இதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான சிதம்பரப்பிள்ளை ரஜனி உறுப்பினர் ஒரு வாக்கினைப்பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

பிரதி தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாராயணம்பிள்ளை தர்மலி;ங்கம் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜெ.இந்துஜா ஆகியோர் போட்டியிட்ட நிலையில் ஒரு வாக்கினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதி தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் நடுநிலையாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.