மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையினை கைப்பற்றியது தமிழ் தேசிய கூட்டமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் ஆட்சியினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் களுதாவளை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஞானமுத்து யோகநாதன் தவிசாளராகவும் பிரதிதவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோட்டைக்கல்லாறு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திருமதி கனகராசா ரஞ்சினி தெரிவுசெய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளுரர்;சிமன்றங்களை அமைக்கும் பணிகள் முதன்முதலாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை இன்று செவ்வாய்க்கிழமை (03-04)காலை நடைபெற்றது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் முதல் அமர்வு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் ஆரம்பமானது.

இன்றைய அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சி 04 உறுப்பினர்களும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 02 உறுப்பினர்களும் தமிழ்  தேசிய விடுதலை கூட்டமைப்பு இரண்டு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இருவர் மற்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி உறுப்பினர் ஒருவருமாக 21 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதனடிப்படையில் தவிசாளரை தெரிவுசெய்யும் வகையில் திறந்த வாக்கெடுப்பு கோரியதற்கு இணங்க திறந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

தவிசாளருக்கான வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த தட்சணாhமூர்த்தி தவராணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஞானமுத்து யோகநாதன் ஆகியோருக்கு இடையில் நிலவிய போட்டியின் அடிப்படையில் 11உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராக ஆறு உறுப்பினர்களும் நடுநிலையாக நான்கு பேரும் வாக்களித்தனர்.

இதன்போது தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு நடுநிலையாக வாக்களிப்பில் கலந்துகொண்டதுன் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தது.