கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் 72வது தேசிய மாநாடு

(சசி  துறையூர்)   கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் 72வது தேசிய மாநாடு சனிக்கிழமை (21) மாலை தன்னாமுனை மியானி மண்டபத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய இயக்குனர் அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயரும், தேசிய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் பொறுப்பாளருமான அதிவணக்கத்துக்குரிய ஆயர் கலாநிதி ஜெஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, தேசிய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் இயக்குனர் அருட்தந்தை மல்கம் பெரேரா மற்றும் அனைத்து மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியங்களின் இயக்குனர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இம்மாநாடு தொடர்ச்சியாக 03 நாட்கள் நடைபெறவுள்ளதோடு இலங்கையின் சகல பாகங்களிலும் இருந்து கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் இதில் பங்குபற்றியுள்ளனர்.

இதன் ஆரம்ப நிகழ்வின் போது மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்களுக்கு 72வது கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய தேசிய மாநாட்டின் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.