தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 14வது ஆண்டு வெருகல் படுகொலை நினைவு தினம்

வெருகல் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெருகல் மலை பகுதியில் நடைபெற்றது.

2004ஆம்ஆண்டு சித்திரை மாதம் 10ஆம் திகதி வெருகல் ஆற்று ஊடாக தரையிறக்கப்பட்ட விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான மோதலில் 208 தமிழ் மக்கள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.

இதனை ஆண்டுகள் தோறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வெருகல் படுகொலை நினைவுதினமாக அனுஸ்டித்துவருகின்றது.

இதன்கீழ் நேற்று மாலை வெருகல் மலை மக்கள் பூங்காவில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதி தலைவர் திரவியம் தலைமையில் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது கட்சி முக்கியஸ்தர்களினால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள்,பொதுமக்கள்,கட்சிஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.