உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு ஊர்வலம்




(லியோன்)

வாய் நலம் கொள்க – தேக நலம் பெருக்கி கொள்ள “ எனும் தொனிப்பொருளில் உலக வாய் சுகாதார தினத்தை சிறப்பிக்கும் விழிப்புணர்வு ஊர்வலம் (20)  மட்டக்களப்பில் நடைபெற்றது .


பொதுமக்கள்  வாய் சுகாதாரத்தை பேணும் பொழுது  மக்களின் முழு சுகாதாராம் எப்படி பேணப்படுகின்றது என்பது தொடர்பாக விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் வாய் சுகாதாரத்த பேணும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு   மட்டக்களப்பு பிராந்திய பணிமனை முன்பாக இருந்து  விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா வரை நடைபெற்றது .

மட்டக்களப்பு பிராந்தி சுகாதார பிரிவின் வாய் சுகாதார பிரிவு  ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிராந்தி சுகாதார பணிமனை பணிப்பாளர் வைத்தியர் திருமதி நவரட்ணராஜா  .கிரேஸ் தலைமையில் பிராந்திய பற்சுகாதார பல் வைத்தியர் அப்துல் வாசித் ஒழுங்கமைப்பில் உலக வாய் சுகாதார தினத்தை சிறப்பிக்கும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது .

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மட்டக்களப்பு பிராந்தி சுகாதார பணிமனை வைத்திய அதிகாரிகள்  ,பொதுசுகாதார பரிசோதகர்கள் , பிராந்திய தாதிய உத்தியோகத்தர்கள் ,அரசினர் ஆசிரியர் கலாசாலை பயிலுனர் ஆசிரியர்கள் ,கலந்துகொண்டனர்