ஆரையம்பதியில் இரண்டு வீட்டினை இலக்குவைத்து சக்திவாய்ந்த வெடி பொருட்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இரண்டு வீட்டினை இலக்குவைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

ஆரையம்பதி 03ஆம் வட்டாரம் எல்லை வீதியில் இரண்டு வீடுகளை இலக்குவைத்தே நேரங்கணித்து வெடிக்கும் வகையில் இந்த குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வீட்டில் நேரங்கணித்து வெடிக்கும் குண்டும் மற்றைய வீட்டில் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தடன் வீட்டின் வேலியில் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸ்ரீலங்கா என்ற பெயர் எழுதப்பட்ட இலக்கங்களுடன் பதாகையொன்றும் தொங்கவிடப்பட்டிருந்தது.

குறித்த வெடி பொருட்கள் அபாகரமானதாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த குண்டுகள் தமிழர்கள் இருவரின் வீட்டின் பகுதியில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு விரைந்த குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினர் மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியில் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த குண்டுகளை பொருத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் கண்டறிவதற்கான தீவிர விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.