கோட்டைமுனை புன்னையம்பதி மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்


(லியோன்)

மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் கொடியேற்றதுடன் ஆரம்பமானது.


மட்டக்களப்பு நகரில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் கொடியேற்றதுடன் ஆரம்பமானது .  

மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம்  21,03,2018 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர் வரும் 30.03.2018  ஆம் திகதி வெள்ளிக்கிழமை  தீர்த்தோற்சவதுடன் நிறைவுபெறும் .

ஆலய கொடியேற்ற நிகழ்வானது கிரியா கலாநிதி பிரதிஷ்டா சக்கரவர்த்தி பிரம்மஸ்ரீ கணேஷ லோகனாதக் குருக்கள் தலைமையில் விசேட யாக பூசைகள் இடம்பெற்று, பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வுகள்  இடம்பெற்றதுடன்  தொடர்ந்து கொடிதம்ப பூசையுடன் வசந்த மண்டப பூசை இடம்பெற்று அம்மன் உள்வீதி  உலா வருதல் பூசையுடன் நிறைவு பெற்றது .

இந்த வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் கொடியேற்ற பெருவிழாவில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர் .