மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.

03.03.2018 அன்று சனிக்கிழமை மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்   மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர் .

பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஏற்பாடு மற்றும் நெறிப்படுத்தலில் த.விமல்ராஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கழகங்களின் சம்மேளன தலைவர் ச.திவ்வியநாதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் வ.லோகேஸ்வரன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அ.தர்ஷிக்கா ஆகியோர் அதிதிகளாக  கலந்துகொண்டனர்.

பிரதேசத்தில் உள்ள அனைத்து  இளைஞர் கழகங்களினதும் நிருவாகிகளான இளைஞர்யுவதிகள் பலரும் இக்கூட்டத்தில் கொண்டமை குறிப்பிடத்தக்கது.