மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தினை கையளிக்கும் நிகழ்வு (Video & Photos)

 (லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு ஆமென் கோணர் வீதிக்கு உரித்தான நிலத்தின் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட  பகுதியை  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகமவினால் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு
02.02.2018  வெள்ளிக்கிழமை நடைபெற்றது .


இலங்கையின் முதலாவது ஆங்கில பாடசாலை என பெருமை பெற்றதும் இலங்கையில்  204 வருடங்கள்  பழமைவாய்ந்த பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின்  ஆரம்ப பிரிவுக்கும் ,இடைநிலை பிரிவுக்கும் இடையில் செல்லும் வீதி நிலத்தினை கல்லூரிக்கு உரித்தான நிலமாக  மாற்றும்  நடவடிக்கையினை கடந்த காலங்களில் கல்லூரி பழைய மாணவ சங்க தலைவர் எஸ் சசிஹரன் மேற்கொண்ட கடின முயற்சியின் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரைக்கு அமைவாக கிழக்குமாகாண ஆளுநரினால்  கல்லூரிக்கு கையளிக்கப்பட்டது

கல்லூரி அதிபர் ஜெ ஆர்  டி . விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக  கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகல்லாகம , சிறப்பு விருந்தினர்களாக கிழக்குமாகாண  ஆளுநரின் செயலாளர் ஜே எஸ் டி எம்  அசங்க அபேவர்த்தன . கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச் இ எம் டப்ளியு ஜி  டி திசாநாயக , கிழக்குமாகாண கல்வி பணிப்பாளர் எம் டி எம் .நிஸாம், மற்றும்  மட்டக்களப்பு  வலயக் கல்விப்பணிப்பாளர்  கே பாஸ்கரன் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கல்லூரி பழைய மாணவர்கள் என பலர்  கலந்துகொண்டனர்