போரதீவுப்பற்று பிரதேச மட்ட விளையாட்டுப்போட்டி ஆரம்பம்.

(பழுகாமம் நிருபர்)
போரதீவுப்பற்று பிரதேச மட்டத்திலான விளையாட்டு விழா இன்று(17)
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் பழுகாமம் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.
போரதீவுப்பற்று பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்கள் பல இதில் கலந்துகொண்டது. முதலாவது போட்டியாக ஆண்களுக்கான எல்லே போட்டி இடம்பெற்றது. இதில் பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுகழகமும், கோயிற்போரதீவு உதய தாரகை விளையாட்டு கழகமும் போட்டியிட்டு 11-03 ஓட்டங்களை பெற்று சூட்டிங் ஸ்டார் வெற்றிவாகை சூடியது.