பாத்திமா புரம் கிராமம் அபிவிருத்தி செய்யப்படுமா ?

பாத்திமா புரம் கிராமம் அபிவிருத்தி செய்யப்படுமா ?

மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுட்குட்பட்ட எல்லை  கிராமம் பாத்திமாபுரம், இந்த கிராமாம் இதுவரை எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் உள்வாங்கப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட சம்மேளன தலைவர் ச.திவ்வியநாதன் கருத்து.

பாத்திமாபுரம் இளவேனில் இளைஞர்கழகம் தனது  பத்தாவது ஆண்டுநிறைவை ஒட்டி நடாத்திய மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்விற்கு சிறப்பு
அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

பாத்திமா புரம் கிராமம் சுமார் அறுபது குடும்பங்கள் வாழும்கிராமம். இந்த கிராமத்திற்கென விளையாட்டு மைதானமில்லை, சிறுவர்களுக்கான சிறுவர் பூங்கா வசதி இல்லை,

2012ம் வருடம் நடைபெற்ற தேசிய மட்ட கிறிக்கட்சுற்றுப்போட்டியில்  மட்டக்களப்பு மாவட்ட அணியை இந்த கிராமத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் பிரதிநிதித்துவப்படுத்தி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்து இருக்கிறார்கள். கல்வி கலை கலாச்சார விளையாட்டு  துறைகளில் திறமையான இளைஞர்கள் இங்கிருக்கிறார்கள்.


அதிகாரிகளாலும் , அரசியல் வாதிகளாலும் இந்த கிராமம் கண்டுகொள்ளப்பட்டதாக என்னால் அறியமுடியவில்லை எனவே அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் விரைவாக இக்கிராமத்தின் தேவைகளை இனம்கண்டு பூர்த்திசெய்ய முன்வரவேண்டும் என தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின்    ஆரம்பநிகழ்வில் ஆரையம்பதி பாத்திமாபுர பங்குத்தந்தை, கிராம சேவை உத்தியோகஸ்தர், கிராம அபிவிருத்தி சங்க நிருவாகிகள், இளவேனில் இளைஞர் கழக முன்னால் நிருவாகிகள், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.