சாரணர் தந்தை பேடன் பவுல் பிறந்த தின நிகழ்வு


(லியோன்)

சாரணர் தந்தை பேடன் பவுல்  161வது  பிறந்த தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர்  பி .ஆனந்தராஜா தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது .


சாரணர் தந்தை பேடன் பவுலின் 161வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்  மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட சாரணர் மாணவர்களின் ஊர்வலம் மாநகர நீரூற்று பூங்கா வரை சென்று பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பேடன் பவுல்  உருவ சிலைக்கு சாரண கழுத்து பட்டி அணிவிக்கப்பட்டு  கெளரவம் அளிக்கப்பட்டது .

இதனை தொடர்ந்து ஊர்வலம் நீதிமன்ற சுற்று வட்டம் வீதி ஊடாக வெபர் மைதானத்தை சென்றடைந்தது .தொடர்ந்து சாரணர் தந்தை பேடன் பவுல் 161 பிறந்த தினத்தை சிறப்பிக்கும் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றது

இந்நிகழ்வில் மாவட்ட சாரணர் சங்க  தவிசாளரும் ,வலயக் கல்விப் பணிப்பாளருமான  கே .பாஸ்கரன் , மாநகர ஆணையாளர்  என் .மணிவண்ணன் , மாவட்ட சாரண உதவி ஆணையாளர் வி .பிரதீபன் ,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் விமல் ராஜ் , வை எம் சி எ . நிறுவன பொது செயலாளர் ஜெகன் ஜீவராஜ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் மாணவர்கள் , சாரண ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

இராணுவ வீரரான பேடன் பவுல் இராணுவத்தில் கற்றுக்கொண்ட பயிற்சிகளை  மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்துடனான கல்வி செயல்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக  பிரவுன்சன் தீவில் 20 சாரணர்களுடன் இந்த சாரணர் இயக்கம்  ஆரம்பிக்கப்பட்டது .  
இந்த சாரணர் இயக்கமானது  தற்போது உலகளாவிய ரீதியில் செயல்பட்டு வருகின்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்த நிலையில் 180 சாரணர் தலைவர்களுடன்  சுமார் 1800 சரணர்களுடன்  செயல்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது