எமது தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகள் பெற்றவர்கள் தொழில் புரிகின்றனர்.


(சசி துறையூர்)

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள மகளீர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினால்    மட்டக்களப்பு, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் தையல் பயிற்சி நிலையத்தில் தையல் தொழில் பயிற்சியினை நிறைவு செய்த யுவதிகளின் உற்பத்திப் பொருட் கண்காட்சியும் விற்பனையும், வவுணதீவு மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் இன்று புதன்கிழமை 21.02.2018  நடைபெற்றது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் பேசுகையில், இவ்வாறான டிப்ளோமா பயிற்சிகளை நிறைவு செய்த யுவதிகளுக்கு  வழங்கப்படும் சான்றிதழ்கள் தொழில்வாய்ப்புக்களைப் பெறுவதற்கு பேருதவியாக அமையும்.

அதேபோன்று பயிற்சியினை பெற்றவர்கள் எமது மாவட்டத்தில் உள்ள தையல் தொழில் பேட்டைகளுக்கு வேலைக்காக செல்லும்போது கூடிய சம்பளத்தை பெறக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளது.

எமது பிரதேசத்தில் பெரும்பாலான பெண்கள் சாதாரணதரம் உயர்தரம் கற்றபின் வீட்டிலே வேலையின்றி இருக்கும் நிலை இங்கு காணப்படுகின்றது.
இப் பிரதேசத்திலிருந்து நகர் பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் குறைந்த வருமானத்திற்காக பெண்கள் செல்கின்றனர்.

அங்கு வேலைக்கேற்ற வருமானம் கிடைக்காமல் மிகக் குறைந்த ஊதியத்தையே பெறுகின்றனர்.

 இத்தகைய பயிற்சிகளை சிறந்த முறையில் நிறைவு செய்தபின்  சாதாரணமாக வீட்டில் இருந்துகொண்டே கனிசமான வருமானத்தை பெறமுடியும்” எனத் தெரிவித்தார்.

பயிற்சி நெறிக்கு பொறுப்பான கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் அ.அரசகுமார் உரையாற்றுகையில்.

 எமது பயிற்சி நிலையத்தில் வருடாந்தம் முப்பது தொடக்கம் நாற்பது வரையிலான யுவதிகள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறுகிறார்கள்.

நிச்சயமாக அவர்களுக்கு சுயதொழில் முன்னேற்றத்திற்க்கான வாய்ப்பும், தங்களது வருமானத்தை அதிகளவில் ஈட்டிக்கொள்வதற்குமான பயிற்சிகளும் வழிகாட்ல் ஆலோசனைகளும் எம்மால் வழங்கப்பட்டிருக்கிறது.

இன்று எங்களது பயிற்சி நிலையத்தில் பயிற்சிகள் பெற்ற யுவதிகள் பெரும்பாலானோர் ஆரையம்பதி ஆடை உற்பத்தி பேட்டையில் வேலை செய்கிறார்கள்.

அத்தோடு இந்த மாணவர்களுக்கு பயிற்சி காலத்தின் போது, மேலதிக கொடுப்பனவுகளை வழங்கு வதற்கு ஒதுழைப்பு நல்கிய அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு, இந்த வருடத்தில் எமது தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை முழுமையாக பூர்த்தி செய்து வெளியேறும் பயிலுனர்களுக்கு தையல் இயந்திரங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.