கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான போட்டி பரீட்சை மட்டக்களப்பில் நடைபெற்றது

(லியோன்)


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் வருடாந்தம் நடாத்தும்  கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான உடல் வலு தேர்வு போட்டி பரீட்சை மட்டக்களப்பில் நடைபெற்றது .


இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன முன்னாள் கால்பந்தாட்ட மத்தியஸ்த பணிப்பாளர் எ எம் . யாபா தலைமையில்  அம்பாறை , மட்டக்களப்பு ,திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான  கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான உடல் வலு தேர்வு போட்டி பரீட்சை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்  (06)  நடைபெற்றது .


மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடத்தப்பட்ட கிழக்குமாகாண கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான உடல் வலு தேர்வு போட்டி பரீட்சை நிகழ்வில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன குழு உறுப்பினர்களான எம் .சி எம்.ஜமால்டீன் , நிமால் விக்கிரம துங்க , இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன உபதலைவர் என் .டி . பாருக் , மட்டக்களப்பு மாவட்ட இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் வி .ஈஸ்வரன் , மட்டக்களப்பு மாவட்ட இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன செயலாளர் டி .காந்தன் மற்றும் அம்பாறை , மட்டக்களப்பு ,திருகோணமலை ஆகிய மாவட்டங்களின்  கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்காக  போட்டியிடும்  போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்