மெதடிஸ்த மத்திய கல்லூரி தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு

தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(15-01)காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நடைபெற்றன.

இலங்கையின் முதல்பாடசாலையென்ற பெருமையினைப்பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கான முதலாம் தரத்திற்கான மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் என்.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் அகிலன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிவப்பிரகாசம்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்குக்கு இந்த ஆண்டு முதலாம் தரத்திற்காக 105 மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் விமல்ராஜ் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள்,பெற்றோர்,பழைய மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து ஆண்டு இரண்டு மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக ஆக்கங்களின் கண்காட்சியும் நடைபெற்றது.

இந்த கண்காட்சியை அதிதிகள்,பெற்றோர் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.இதில் மாணவர்களின் சிறப்பான கைவண்ணம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது.