மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையின் கிறிஸ்து பிறப்பு விழா

(லியோன்)

மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையின்  கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு விசேட   ஒளிவிழா நிகழ்வுகள் இன்று மாலை  நடைபெற்றது


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையில் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு  அதிபர் திருமதி ஞா .ராஜனி தலைமையில்  சிறப்பு ஒளிவிழா நிகழ்வுகள் அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து  மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டன.
இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றளுடன் சிறார்களின்   ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது ,

இந்நிகழ்வில்  அதிதிகளாக  மட்டக்களப்பு கல்குடா மறை பயிற்சி கல்லூரி  அதிபர் சுஜிதர்  சிவநாயகம், மட்டக்களப்பு வலயக் கல்வி  உதவிக் கல்வி பணிப்பாளர்  எம் .புவிராஜா , மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மேன்பாட்டு உத்தியோகத்தர் .டி .மேகராஜன்,  அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர் திருமதி என் .தர்மசீலன் ,மட்டக்களப்பு கோட்டமுனை பெதடிஸ்த ஆலய முகாமை குரு , எஸ் எஸ் .டெரன்ஸ் , அமிர்தகழி மெதடிஸ்த ஆலய அருட்சகோதரி கிரேஸ் ரொபின் ,   மற்றும்   பாடசாலை  ஆசிரியர்கள் ,   பாடசாலை  பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .